விழுப்புரம்: திண்டிவனத்தில் பட்டியலின அரசு ஊழியரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய வேண்டுமெனவும் ஜிஎஸ்டி வரியை குறைத்தது மட்டும் போதாது செஸ் வரியை ரத்து செய்யவேண்டுமென விழுப்புரம் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பட்டியலின இளநிலை உதவியாளர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் பெண் நகரமன்ற உறுப்பினர் உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்பதால் அவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி திண்டுவனத்தில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

திண்டிவனம் நகராட்சி மட்டுமல்ல உள்ளாட்சி நகராட்சிகளில் தொடர்ச்சியாக பட்டியல் சமூகத்திற்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் காட்டப்படுவதாகவும் பலதுறைகளில் சிறப்பாக ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில் காட்டப்படுகிற சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டுமென கூறினார்.

Continues below advertisement

உள்ளாட்சி அமைப்புகளில் துணை தலைவர் பதவிகளில் பட்டியலின சமுகத்தினருக்கு வழங்க உரிய சட்டத்திருத்ததினை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் சாதிய பாகுபாடு நடைபெறும் இடங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்யப்படுகிற வழக்குகளில் மாநில எஸ் சி எஸ் டி ஆணையமே உண்மைக்கமாறான வழக்குகள் என கூறி பல வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. வழக்குகள் ரத்து செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் இது போன்று வழக்குகள் ரத்து செய்வது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

ஜி எஸ் டியில் மத்திய அரசு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது வரவேற்க தக்கது என்றும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜி எஸ் டி வரியை குறைக்க கூறியும் செய்யாத அரசு இப்போது செய்துள்ளது ஆறுதல் அளிப்பதாகவும் ஜி எஸ் டியில் வரிகுறைக்கப்பட்டாலும் செஸ் வரியில் ஆண்டுக்கு ஒன்னரை லட்சம் வருவாய் ஈட்டப்படுகிறது. அப்படி ஈட்டப்படும் வருவாய் மக்களிடம் பெற்று கார்பரேட் நிறுவனங்களுக்கு தானம் செய்யும் அரசாக ஒன்றிய அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

செஸ் வரி விதிப்பினை வைத்து கொண்டே ஜி எஸ் டியில் வரி குறைத்துவிட்டோம் என்பது மக்களை ஏமாற்றும் வேலை என்றும் பட்டியலின சமூக மக்கள் உரிமைகளை பற்றி கையில் எடுக்கவும் பேசுவதற்கும் பாஜகவிற்கும் அதிகமுகவிற்கும் தார்மீக உரிமை இல்லை என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.