Villupuram : அமைச்சர் மஸ்தான் திடீர் விசிட்; அவசரகதியில் நோயாளியின் கிழிந்த படுக்கையை மாற்றிய ஊழியர்கள்
விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டபோது கிழிந்த நிலையில் இருந்த படுக்கையை அவசர அவசரமாக மாற்றிய ஊழியர்கள்.
விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் அமைச்சர் மஸ்தானிடம் புகார் தெரிவிக்க திடீரென அமைச்சர் ஆய்வுக்கு செல்லவே, கிழிந்த நிலையில் இருந்த படுக்கையை அவசர அவசரமாக ஊழியர்கள் மாற்றினர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்காக கதிரியக்க மையத்தை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை சார்ந்த 1200 புற்றுநோயாளிகள் பயன்பெறும் வகையில் இந்த சிகிச்சை மையம் அமைக்கபட்டுள்ளதாகவும், நாள் தோறும் 25 பிரசவங்கள் மருத்துவமனையில் நிகழ்வதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறசென்ற போது தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த மனவாளவன் என்வவரின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனவாளன் என்வருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறி அழுதனர். உடனடியாக நோயாளியை கான அமைச்சர் மஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணவாளனை சந்தித்து பார்வையிட்டார். அப்போது அமைச்சர் மஸ்தான் வருவதை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் நோயாளி படுக்கையில் இருந்த அழுக்கான மெத்த விரிப்பு மற்றும் கிழிந்திருந்த தலையனையை புதிய மெத்த விரிப்பை கொண்டு மறைத்தனர். நோயாளியை நேரில் சந்தித்த அமைச்சர் மஸ்தான் நலம் விசாரித்துவிட்டு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.