தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. 2 ஆண்டுகள் காத்திருப்பு.. திறக்கப்பட்ட மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில்
மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று திறக்கப்பட்டது.
Continues below advertisement

மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில்
விழுப்புரம்: கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்டதில் இரு தரப்பு மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோவில்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தரிசனம் செய்தபோது ஒரு சமூகத்தினர் சாமி தரிசனம் செய்யவிடாமல் அடித்து வெளியேற்றினர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இருப்பினும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால் பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்க்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பினர் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் அதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி இருதரப்பினரையும் கோவிலுக்குள் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி திரெளபதி அம்மன் கோவிலில் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு இருதரப்பினரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி இன்று ஒரு தரப்பினை சார்ந்த பெண் ஒருவர் மற்றும் சிறுவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் விழா தரப்பினர் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் கோவிலை வெள்ளிக்கிழமை திறக்க கூறியதை அதிகாரிகள் கேட்டுக்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினர்.
அதனை தொடர்ந்து பட்டியலின சமூகத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவிலுக்குள்ளே செல்லாத நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ததாகவும் இதற்கு முன்னதாகவும் கோவிலில் சென்று தரிசனம் செய்ததில்லை திருப்தியாக சாமி தரிசனம் செய்தததாக தெரிவித்தனர். பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் போது ஒரு சமூக பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சாமி தரிசனம் செய்த பெண் ஒருவர் கூட்டத்தில் சாமி ஆடினார். அப்போது ஒரு தரப்பினர் மண்னை வாரி விட்டதாலும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த கோவிலானது தினந்தோறும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே திறக்கப்படும் வெள்ளிக்கிழமை மட்டும் மாலையில் ஒரு மணி திறக்கபட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.