விழுப்புரம் : மேல்மலையனூர் பகுதியில் ஓசி பரோட்டா கேட்டு ஓட்டல் உரிமையாளர்கள் மண்டை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக திமுக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியில் சியப்பூண்டி கிராமத்தை சேர்ந்த சரவணன்(26) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக முனிஸ்வரன் என்ற உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி பிற்பகல் மேல்மலையனூர் எம்.சி ராஜா நகர் பகுதியை சேர்ந்த திமுக வார்டு பிரதிநிதி ஆசைத்தம்பி(50), ஆட்டோ ஓட்டுநர் சிவராஜ்(36) ஆகியோர் உணவகத்திற்கு வந்து ஓசி பரோட்டா கேட்டுள்ளனர். அதற்கு உணவக உரிமையாளர் சரவணன் முதலில் 100 ரூபாய்க்கு ஓசியில் பரோட்டா கொடுத்துள்ளார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


சிறிது நேரத்திற்கு பிறகு ஆசைத்தம்பி மீண்டும் வந்து ஓசியில் பரோட்டா கேட்டுள்ளார். இதற்கு உணவக உரிமையாளர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக பிரமுகர் ஆசைத்தம்பி, ‘எங்களுக்கு ஓசியில் பரோட்டா தராமல், எங்கள் ஊரில் நீ எப்படி உணவகம் நடத்த முடியும்’ என கேட்டு உணவக உரிமையாளர் சரவணன், அவரது அண்ணன் சதீஷ் மற்றும் அவரது அம்மா தனலட்சுமி ஆகியோரை சமையலுக்கு பயன்படுத்தும் கரண்டி மற்றும் கல் ஆகியவற்றால் கடுமையாக தாக்கியதில் உணவக உரிமையாளர் சரவணன் மற்றும் அவரது அண்ணன் சதீஷ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் ஓசி பரோட்டா கேட்டு தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண