(Source: ECI | ABP NEWS)
விழுப்புரம் மருத்துவமனையில் அதிசயம்! வயிற்றில் சிக்கிய 5.5 செ.மீ ஸ்டீலை அறுவை சிகிச்சை இன்றி அகற்றி சாதனை!
விழுப்புரத்தில் எஸ்பிவி கேஸ்ட்ரோக்யூர் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோபி முறையில் வயிற்றிலிருந்த 5.5செ.மீ ஸ்டீலை அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் எஸ்பிவி கேஸ்ட்ரோக்யூர் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோபி முறையில் வயிற்றிலிருந்த 5.5செ.மீ ஸ்டீலை அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
அதிநவீன எண்டோஸ்கோபி முறையில் சிகிச்சை
விழுப்புரத்தில் எஸ்பிவி கேஸ்ட்ரோக்யூர் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோபி முறையில் வயிற்றிலிருந்த 5.5செ.மீ ஸ்டீலை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து லேசர், லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி நிபுணர் வெங்கடேஷ் தெரிவித்ததாவது:
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், விஜிபி நகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்பிவி கேஸ்ட்ரோக்யூர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி வயிற்றில் ஏதே ஒன்று விழுங்கி விட்டதாக தன்னிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வந்தார்.
அப்போது அவரது வயிற்றில் சோதனை செய்தபோது காய்கறியின் தோலை அகற்றும் ஸ்டீல் கருவி வயிற்றில் சிக்கியுள்ளதை கண்டுபிடித்தோம். அதன் பின்னர் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமலும், மயக்க மருந்து அளிக்காமலும் அதிநவீன சிறப்பு லேப்ரோஸ்கோபிக் முறையில் நோயாளியின் வயிற்றிலிருந்த 5.5செ.மீ அளவுள்ள அந்த ஸ்டீலினை குடல் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.
அதன்பின்னர் அந்த பெண்மணி கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டார் என தெரிவித்தார். மேலும் இந்த எஸ்பிவி கேஸ்ட்ரோக்யூர் மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி முறையில் அப்பண்டிக்ஸ், பித்தப்பை கல், குடலிறக்கம், கர்ப்ப்ப்பை அகற்றுதல், கர்ப்பை கட்டி அகற்றுதல், சினைப்பை கட்டி அகற்றுதலும், அதிநவீன லேசர் முறையில் மூலம், பௌத்திரம், வெடிப்புகளுக்கும், எண்டோஸ்கோபி முறையில் வயிறு பரிசோதனை, மலக்குடல் பரிசோதனை,பெருங்குடல் பரிசோதனை, பித்தநாள கல் அகற்றுதல் மற்றும் நுண்துளை அறுவை சிகிச்சைகள் சிறந்த முறையிலும், உயர்தரமாகவும் அளிக்கப்படுகிறது என கூறினார்.
எண்டோஸ்கோபி (Endoscopy) என்பது உடலின் உள் உறுப்புகளைப் பார்ப்பதற்கும், சில சிகிச்சைகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ முறையாகும். இதற்கு 'உள்நோக்கி' என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. எண்டோஸ்கோபி என்றால் என்ன?எண்டோஸ்கோபி என்பது ஒரு நீண்ட, மெல்லிய, நெகிழ்வான குழாயைப் (Endoscope) பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளைப் பரிசோதிக்கும் ஒரு முறையாகும். இந்தக் குழாயின் முனையில் ஒரு சிறிய கேமரா மற்றும் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும்.
கேமரா: இது உடலின் உட்பகுதிகளைப் படம்பிடித்து, அதனை ஒரு திரையில் (Monitor) பெரிதாகக் காட்டுகிறது.
விளக்கு: இது பரிசோதனை செய்யும் பகுதி தெளிவாகத் தெரிய உதவுகிறது.endoscopy எவ்வாறு செய்யப்படுகிறது?
தயார்படுத்துதல்: பொதுவாக, இந்தச் செயல்முறைக்கு முன் நோயாளிக்கு மயக்க மருந்து (Sedative) அல்லது வலி தெரியாமல் இருக்க மருந்து கொடுக்கப்படும். இதனால் அவர்கள் ஓய்வாகவும், வலி இன்றியும் இருப்பார்கள்.கருவியை உள்ளே செலுத்துதல்:
மேல் ஜி.ஐ. (Upper GI) எண்டோஸ்கோபி: வாய் வழியாகக் குழாயைச் செலுத்தி உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் தொடக்கப் பகுதி ஆகியவை சோதிக்கப்படும்.
கொலோனோஸ்கோபி (Colonoscopy): ஆசனவாய் வழியாகக் குழாயைச் செலுத்தி பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவை சோதிக்கப்படும்.
பரிசோதனை: மருத்துவர் குழாயை மெதுவாக உள்ளே செலுத்தி, திரையில் தெரியும் படங்களைப் பார்த்து, பிரச்சனைகளைக் கண்டறிவார்.
எண்டோஸ்கோபியின் பயன்கள்எண்டோஸ்கோபி முக்கியமாக இரண்டு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது:
1. நோய்களைக் கண்டறிய (Diagnosis): தொடர்ச்சியான வயிற்று வலி, நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, அல்லது விழுங்குவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளுக்கான காரணத்தைக் கண்டறிய உதவுகிறது. இரைப்பைப் புண்கள் (Ulcers), வீக்கம், மற்றும் கட்டிகள் (Tumors) ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது.செரிமான மண்டலத்தில் ஏற்படும் இரத்தக் கசிவின் (Bleeding) இடத்தைக் கண்டறிய உதவுகிறது.
2. சிகிச்சை அளிக்க (Treatment):
பயாப்ஸி (Biopsy): சந்தேகத்திற்கிடமான திசுக்களின் சிறிய பகுதியை (மாதிரியை) வெட்டி எடுத்து, புற்றுநோய் போன்ற சோதனைகளுக்கு அனுப்ப உதவுகிறது.
பாலிப்களை (Polyps) அகற்றுதல்: குடலில் வளரும் சிறிய கட்டிகளான பாலிப்களை அகற்றப் பயன்படுகிறது.
இரத்தக் கசிவை நிறுத்துதல்: இரத்தக் கசிவு ஏற்படும் இடத்தில் மருந்துகளைச் செலுத்தியோ அல்லது வெப்பத்தைப் பயன்படுத்தியோ கசிவை நிறுத்த உதவுகிறது.
தடைகளை நீக்குதல்: உணவுக்குழாய் போன்ற பகுதிகளில் ஏற்படும் குறுகலான இடங்களை விரிவுபடுத்தவோ அல்லது சிக்கிக்கொண்ட வெளிப் பொருட்களை அகற்றவோ இது உதவுகிறது. இது ஓர் அறுவை சிகிச்சை அல்ல, மாறாக உடலின் உள்ளே நேரடியாகப் பார்த்து பிரச்சனைகளைக் கண்டறியவும், சில சிறிய சிகிச்சைகளைச் செய்யவும் உதவும் ஒரு மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பமாகும்.





















