விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் அருகே வசிக்கும் இருளர் சமூகமக்கள் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தோல் நோயால் பாதிக்கபட்டுள்ளனர். 


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் இருளர் சமூகத்தை சார்ந்த 40 குடும்பங்கள் குடிசை வீட்டில் கடந்த மூன்று தலைமைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் இருளர் சமூக மக்களுக்கு குடிநீர், தார்சாலை, பட்டா எதுவுமின்றி வசித்து வரும் இவர்களுக்கு அரசு சார்பில் குடிநீர் வசதி, இலவசமனை பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.






இருளர் சமூக மக்கள் வசிக்கும் பதியிலயே பேரூராட்சி சார்பில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் பன்றிகளால் தோல் ஏற்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தோல் ஏற்பட்டு பாதிக்கபட்டுள்ளதால் தங்கள் பகுதியில் குப்பைகளை கொட்டாமலும், பன்றிகள் மேய்வதை தடுத்து அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டுமென அப்பகுதியில் வசிப்பவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம் என வாக்கு கேட்டு மட்டும் தங்கள் பகுதிக்கு வேட்பாளர்கள் வருகை புரிவதாகவும் அதன் பின்னர் தங்கள் பகுதியினரை மறந்து விடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.