8-வது முதல் பி.இ வரை படித்தவரா நீங்க? விழுப்புரத்தில் காத்திருக்கும் தனியார் துறை வேலைகள் - மிஸ் பண்ணாதீங்க!
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை பிப்ரவரி 20, 2026 (வெள்ளிக்கிழமை) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை பிப்ரவரி 20, 2026 (வெள்ளிக்கிழமை) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை பிப்ரவரி 20, 2026 (வெள்ளிக்கிழமை) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
முகாமின் முக்கிய அம்சங்கள்:
பங்கேற்கும் நிறுவனங்கள்: 20-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள்.
பணிக்காலியிடங்கள்: 500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேதி மற்றும் நேரம்: 20.02.2026, வெள்ளிக்கிழமை (காலை 10 மணி முதல்).
இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரம்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
இதற்கான கல்வித்தகுதிகள்:
- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை.
- ITI, டிப்ளமோ (Diploma), B.E/B.Tech.
- நர்சிங் (Nursing) மற்றும் பார்மசி (Pharmacy).
கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
முகாமில் பங்கேற்க விரும்பும் மனுதாரர்கள் தங்களின்: அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுய விவரக் குறிப்பு (Bio-Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்தத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு (Employment Registration) ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார். படித்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.























