தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவ/ மாணவியர்களுக்கான விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வரும் 10.05.2024 மற்றும் 11.05.2024 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.


விளையாட்டு விடுதிகள்


மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி: அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், அசோக் நகர் - சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் - சென்னை, கிருஷ்ணகிரி, மதுரை, உதகமண்டலம், நெய்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம், மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதி: தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் - சென்னை, நாகர்கோவில், நாமக்கல், உதகமண்டலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, செல்வம் மேல்நிலைப்பள்ளி - நாமக்கல், திருவண்ணாமலை, தேனி, ஆகிய இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 

 

மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜீடோ, கபடி, மல்லர்கம்பம், ஸ்குவாஷ், நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளு தூக்குதல், மல்யுத்தம், வுஷு மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாள்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜீடோ, கபடி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன. 

 

இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6,7,8,9 மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் வரும் 10.05.2024 அன்று காலை 7.00 மணிக்கு ஆண்களுக்கும் மற்றும் 11.05.2024 அன்று காலை 7.00 மணிக்கு பெண்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி அருகில், கீழ்பெரும்பாக்கம், விழுப்புரத்தில் நடைபெறும். 

இணையதளத்தில் பதிவு


மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ/மாணவியர்கள் விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 26.04.2024 முதல் www‌.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in (Online Registration) என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள்: 08.05.2024 அன்று மாலை 5.00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு கூடுதல் தகவல் தொடர்பு மைய அலைபேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

 

தேர்வு போட்டிகளில் கலந்துகொள்ள 10.05.2024 மற்றும் 11.05.2024 அன்று வரும் மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொண்ட விண்ணப்பம், ஆதார் அட்டை, Bonafide சான்றிதழ், ஆகிய படிவங்கள் கொண்டுவர வேண்டும். மேற்கண்ட தேர்வு போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ ( 7401703485, 8754744060, 6481799370 ) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தெரிவித்துள்ளார்.