விழுப்புரம் : பேட்டரியில் ஏற்பட்ட தீயால் நெல் அறுவடை இயந்திரம் கருகி சேதம்.. தப்பிய ஓட்டுநர்
விழுப்புரம்: மரகதபுரம் கிராமத்தில் பேட்டரியில் ஏற்பட்ட தீயால் நெல் அறுவடை இயந்திரம் கருகி சேதம்
விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள மரகதபுரத்தில் நெல் அறுவடையின் பொழுது அறுவடை இயந்திரத்தின் பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு பத்து லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் கருகி சேதமாகின. இதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விழுப்புரம் அருகேயுள்ள மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுகுமார் என்பவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நெல் வயலில் நெற்கதிர்கள் பயிரிடப்பட்டு இன்று அறுவடை செய்வதற்காக அதே கிராமத்தைச் ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் சுகுமார் வயலில் நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென நெல் அறுவடை இயந்திரத்தின் பேட்டரி இருக்கும் பகுதியில் இருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து நெல் அறுவடை இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து கீழே இறங்கி அதிர்ஷ்டமாக உயிர் தப்பினார்.
பின்னர் இயந்திரம் எரிவதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் நெல் வயலில் மேலும் தீ பரவாமல் இருக்க நெற்பயிர்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தினர். இருப்பினும் குறிப்பிட்ட அளவிலான நெற்கதிர்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. பின்னர் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது தீயனைப்பு வீரர்கள் தாமதமாக வந்ததால் நெல் அறுவடை இயந்திரத்தின் இன்ஜின் முழுவதும் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்தில் பத்து லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் தீயில் கருகி சேதமாகின.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்