விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சக கொள்ளை கூட்டாளியை நண்பனே கொலை செய்து ஏரியில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தை சார்ந்த கவியரசன் என்ற இளைஞர் மீது பல்வேறு குற்றவழக்குகள் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் கவியரசன் காணமால் போனதால் கவியரசனை கண்டுபிடித்து தருமாறு விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அவரது தந்தை கலியமூர்த்தி புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் கவியரசனின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரனை மேற்கொண்டனர்.


விசாரணையில் கவியரசனுக்கும் அவரது நண்பனான ராம்குமாருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் மது போதையில் தனது நண்பர்களுடன் இணைந்து ராம்குமார்  கவியரசனை கொலை செய்தது ஆவுடையார்பட்டு ஏரியில் புதைத்ததுள்ளது போலீசார் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து ராம்குமாரை கைது செய்த போலீசார் ஆவுடையார்பட்டு ஏரியில் தீயனைப்பு வீரர்கள் உதவியுடம் கவியரசனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏரியில் நீர் உள்ளதால் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மது போதையில் சக கொள்ளை கூட்டாளியை நண்பனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.