உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று முதல் தமிழகம் முழுவதும் உணவகங்கள், திரையரங்குகள், மற்றும் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கை, போன்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, மேலும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. 



 

 

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து உள்ளன. அதன்படி கடலூரில் உள்ள உணவகங்களில் 50 சதுவிகித இருக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன மேலும், திரையரங்குகளிலும் 50 சதுவிகித இருக்கைகளுடனே திரைப்படங்கள் திரையிடப்பட்டன, ஆனால் பேருந்துகளில் மட்டும் வழக்கம் போல் பயணிகளை ஏற்றி செல்லும் நிலை தொடர்கிறது, இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பேருந்துகள் பற்றாக்குறை தான் இரதற்கு காரணம் என்றும் கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

 



 

அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு முழு ஊரடங்கு துவங்கிய நிலையில் கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் திறந்துள்ள கடைகளை அடைக்க சொல்லி காவல் துறையினர் வாகனம் மூலம் ஒலி பெருக்கிக் கொண்டு எச்சரிக்கை செய்தனர். அதனைத் தொடர்ந்து கடலூர் புதுச்சேரி எல்லையில் ஆள்பேட்டை பகுதியில் காவல் துறையினர் புதுச்சேரியில் உருந்து வரும் வாகனங்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தேவையின்றி வந்த வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு முதல் நாளான இன்று, எச்சரிக்கை செய்து அனுப்புகிறோம் நாளை தேவையின்றி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். 



 

இதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனை செய்தனர் அப்பொழுது சிப்காட் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு உள்ள அணைவரும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர். மேலும் தேவையின்றி வெளியில் வருபவர்கள் முதலான இன்று எச்சரித்து அனுப்பப்பட்ட நிலையில் நாளை முதல் பத்து மணிக்குப் பிறகு தேவையின்றி வருபவர்கள் அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர், மேலும் இரவு நேர ஊரடங்கு பெட்ரோல் பங்குகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் வழக்கம் போல் இயங்கின. 



 

மேலும் இன்று முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில் கடலூரில் இன்று கோயில்கள் மூடப்பட்டு பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.