விழுப்புரம் : குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்திலுள்ள் இரு அறைக்களுக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆசிரமத்தில் மதமாற்றம் மற்றும் அளவுக்கு அதிகமான டிரக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கபட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அடித்து துன்புறுத்திய வழக்கினை சிபி சி ஐ டி போலீசார் விசாரணை செய்து வருகின்ற நிலையில் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி, அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதீஷ் கோபிநாத் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கபட்டுள்ளனர். இந்நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மூன்று வயது குழந்தை இருந்தது தொடர்பாக குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி தாசில்தார் ஆதி சக்தி சிவகுமரிமன்னன் ஆகியோர் ஆய்வு செய்தபின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் காப்பகத்தை சார்ந்த 6 பெண்கள் 13 ஆண்கள் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களை நேரில் சந்தித்து ஆனந்த் விசாரனை செய்தார்.
விசாரனைக்கு பின் மீண்டும் குண்டலப்புலியூர் ஆசிரமத்திற்கு வந்த குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் ஆட்சியர் சி.பழனி முன்னிலையில் விக்கிரவாண்டி தாசில்தார் ஆதி சக்தி சிவகுமரிமன்னன் அன்புஜோதி ஆசிரமத்திலிருந்த நிர்வாகி ஜீபின் பேபி தங்கியிருந்த அறை மற்றும் வார்டன் அறை ஆகிய இரண்டு அறைகளுக்கு சீல் வைத்தனர். அன்பு ஜோதி ஆசிரமத்திலுள்ள இரண்டு அறைகளுக்கு சீல் வைத்த பின் பேட்டியளித்த தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டதில் பாண்டிச்சேரி திரிபுரா, மேகலயா, மேற்கு வங்க போன்ற 5 மாநிலங்களை சார்ந்தவர்கள் சம்பந்தபட்டிருப்பதால் இரண்டு நாட்களில் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும்,
2021 ஆம் ஆண்டில் 60 தங்க வைப்பதற்கு மட்டுமே கட்டிட அனுமதி பெற்றிரு அதன் பிறகு 150 க்கும் மேற்பட்டோர் இங்கு தங்க வைக்கபட்டுள்ளதாகவும், செயற்கையான வழியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிரக்குகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலையின் ஓரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் கை கால்கள் உடைக்கபட்டு டிரக்குகள் வழங்கி மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதே போன்று பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கபடும் எனவும் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.