விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பலாம் மூழ்கியதால் ஆறு கிராமங்களுக்கான போக்குவரத்து துப்டிப்பு. விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் - சேர்ந்தனூர் இடையே மலட்டு ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. தற்போது தொடர் மழை காரணமாகவும், சாத்தனூர் அனையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் தரைப்பாலத்தின் மேல்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தால் அப்பகுதி பொது மக்கள் பாலத்தைக் கடக்க நெடுஞ்சாலைத்துறையினர் தடை ஏற்படுத்தியுள்ளனர். தடையையும் மீறி சிலர் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடந்து வருகின்றனர்.




அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை தடைப்பட்டுள்ளது இதனால் விழுப்புரத்திலிருந்து பானாம்பட்டு, ஆனாங்கூர், பில்லூர் வழியாக சேந்தனூர் குச்சிபாளையம், அரசமங்கலம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு கிராம மக்கள் பானாம்பட்டிலிருந்து வாணியம்பாடி, வழியாக சுமார் 10 கி.மீ சுற்றி செல்லகூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அரசு பேருந்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.


விழுப்புரம்  மாவட்டத்தின் மழை நிலவரம்


விழுப்புரம் : 32 மி.மீ


விக்கிரவாண்டி : 22.50 மி.மீ


வானூர் : 39 மி.மீ


திண்டிவனம் : 23 மி.மீ


மரக்காணம் : 38 மி.மீ


செஞ்சி : 26 மி.மீ


மேல்மலையனூர் : 7 மி.மீ


திருக்கோயிலூர் : 19மி.மீ


திருவெண்ணைநல்லூர் : 13 மி.மீ


வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், சென்னை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 


சென்னையில் நேற்று (15.11.2023) காலை தொடங்கிய நள்ளிரவு வரை கொட்டி தீர்த்தது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16-ம் தேதி ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடகிழக்கு திசையில் திரும்பி நவம்பர்-17 ம் தேதி ஒடிடா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த்து. ‘


இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்


நேற்று (14-11-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-11-2023) காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து  சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.


இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16-ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை  ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை  ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18-ஆம் தேதி காலை வடக்கு  ஒரிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.