விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விபத்து கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், சாலையில் நடந்து சென்ற ஒருவர் என மூன்று பேர் உயிரிழப்பு
கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பேரணி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (32) அவரது நண்பர் பூபாலன் (49) ஆகிய இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் திண்டிவனத்தில் நிறுத்தி வைத்திருந்த தங்களது இருசக்கர வாகனத்தில் பேரணி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விளங்கம்பாடி என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் அதிவேகமாக நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளது அதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், அடுத்ததாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கார் ஓட்டுனர் தலைமறைவு
விபத்துக்கு குறித்து மயிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர பள்ளத்தில் கவிழுந்த நிலையில் ஓட்டுனர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த விபத்து குறித்து மயிலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நடந்து சென்றபோது கார் மோதி உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.