விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூரில் ஒரே குடும்பத்தை சார்ந்த சகோதரிகள் விடுமுறைக்கு வந்த சிறுவன் ஆற்று நீரில் குளித்த போது மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அருகேயுள்ள அரசூர் கிராமத்தில் செல்லும் மலட்டாற்றில் நீர் செல்வதால் இன்று அதே பகுதியை சார்ந்த சகோதரிகளான சிவசங்கரி (20) அபிநயா (15) மற்றும் ராஜேஷ் 15 கிரண் ஆகிய நான்கு பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் ஆழத்திற்கு சென்று குளித்துள்ளனர். அப்போது சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் அதிகளவு பள்ளத்தில் இறங்கியதால் நீரில் மூழ்கி காப்பாற்றுங்கள் என கத்தவே கரை பகுதியில் குளித்து கொண்டிருந்த சிறுவன் கிரன் கிராம மக்களை அழைத்து சென்று நீரில் மூழ்கியவர்களை மீட்க கூறியுள்ளான்.

இதனையடுத்து ஆற்று நீரில் மூழ்கியவர்களை கிராம மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  சிவசங்கரி (20), அபிநயா (15) மற்றும் ராஜேஷ் ஆகிய மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சார்ந்த சகோதரிகள் விடுமுறைக்கு வந்த சிறுவன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் முழுவதும், கோடை போல் பகல் நேரங்களில் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதே போல், செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வானுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார் என மாவட்டம் முழுவதும், இரவு தொடங்கி 2:30 மணி நேரம் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது.

கடும் வெயிலுக்கு இடையே, பலத்த மழை பெய்ததால், குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது, இந்நிலையில் மலட்டாற்றில் திடீரென வந்த வெள்ளத்தால் ஆற்றில் குளித்த மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மணலில் சிக்கி உயிரிழந்தனர்.