கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார் மங்கலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒரே இடத்தில் இயங்கி வருகிறது.இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது.
மேலும் மின்சார பெட்டிகள், ஆய்வு கூடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம். இந்த நிலையில் நேற்று இந்த பள்ளி கட்டிடம் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளியில் அவ்வகுப்பில் பயிலும் மாணவர்கள் யாரும் இல்லாத காரணத்தால்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் குறிஞ்சிபாடி சுற்று வட்டராத்தில் உள்ள சுமார் 70 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் மேலும் 4 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே பள்ளி கட்டிடம் சற்று பழுதடைந்து காணப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திடீரென பள்ளியின் மேல் தாரைகள் உடைந்து விழுந்தது இதன் காரணமாக அங்கு பயின்று வரும் பள்ளி குழந்தைகள் அலறி அடித்து கொண்டு பள்ளி வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படமால் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தப்பினர். இதனால் பள்ளியில் 70 குழந்தைகள் பயின்று வரும் நிலையில் குழந்தைகள் பயில தரமாக கட்டிடம் இல்லாத்தால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மரத்தடியில் படிக்கின்ற அவல நிலை ஏற்பபட்டு உள்ளது.
எனவே இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவித்தும் அதிகாரிகள் வந்து பார்க்காதாதல் பெற்றோர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரவும் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழுது அடைந்த பள்ளி கட்டிடங்களை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தந்து மாணவ மாணவிகளின் உயிர் பயத்தை போக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஊர் பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.