விழுப்புரம்: தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நிலை தான் உள்ளது, அந்த நிலையே தான் தொடரும் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திராவிட மாடலுக்கு முன்னோட்டமாக இருந்தவர் பெரியார்


தந்தை பெரியாரின் 51 வது ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நகர கட்சி அலுவலகத்திலிருந்து திமுகவினர் அமைதி ஊர்வலமாக வந்து காமராஜர் வீதியிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா முன்னாள் எம்பி கெளதமசிகாமணி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் கலைஞர் வழியில் ஸ்டாலின் ஆட்சி செய்து வருவதாகவும், பெரியார் வைக்கம் கோயில் போராட்டம் நடத்தியவர் அவருக்காக பெரியார் நினைவு மண்டபம் நூலகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளாதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் -  அமைச்சர் பொன்முடி


பெரியார் திராவிட மாடலுக்கு முன்னோட்டமாக இருந்தவர் என்றும் இளைஞர்களிடம் அவரின்  வரலாறு தெரிவிக்க வேண்டும் கொள்கைகள் சாதனைகளை எடுத்துரைக்கும் நிகழ்வாக இந்த நினைவு நாள் இருக்கும் என தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற நிலையில் தான் இருக்கும் என அறிவித்திருக்கிறார். இப்போது தமிழகத்தில் எப்படி இருக்கிறதோ அப்படிதான் இருக்குமென பொன்முடி கூறியுள்ளார்.

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 



தமிழ்நாட்டு பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும். மாற்றம் ஏதும் இல்லை. மத்திய அரசின் புதிய நடைமுறை மத்திய அரசின் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை ஏறப்டுத்துவதே திராவிட மாடல் அரசின் இலக்கு” எனத் தெரிவித்தார். 


முன்னதாக, ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்பது விதிமுறையாக இருந்து வந்தது. இதனால் கல்வித் தரம் குறைவதாக அவ்வபோது குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில்தான். ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின் படி, ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.


அந்த வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. அப்போதும் அவர் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் ஒருமுறை அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் திருத்தம் கொண்டுவந்துள்ளது.