திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனின் மனைவி பவானி அம்மாள் நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் அமைச்சர் கனேசன் சென்னையில் இருந்துள்ளார் மனைவி உயிரிழந்த சேதி கேட்டு அதிர்சசி அடைந்த அமைச்சர் உடனே சென்னையில் இருந்து விருத்தாசலத்தில் உள்ள இல்லத்திறக்கு வந்தார் மனைவியை கண்டு கட்டிபுடித்தபடி கதறி அழதார் அமைச்சர். மேலும் எனக்கு அந்தஸ்து பதவியெல்லாம் கிடைக்க காரணமா இருந்த உன்னை கவனிக்காமல் விட்டுவிட்டேனே, கடைசி நேரத்துல உன் பக்கத்துல இல்லாம போயிட்டேனே என்று மனைவி உடல் அருகே நின்று அமைச்சர் கணேசன் அவர்கள் கதறியது பார்ப்பவர்களை உருக வைத்தது.

 



 

அமைச்சர் கணேசன்- பவானி தம்பதிக்கு கவிதா லட்சுமி, கனிமொழி, கலையரசி, சிந்துஜா என்ற நான்கு பெண் பிள்ளைகளும், வெங்கடேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகள் கவிதா லட்சுமி ஒரு ஆண்டுக்கு முன்புதான் கொரோனா வைரஸ் தொற்றால் காலமானார். பின்னர் உயிரிழந்த தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி பவானி அம்மால் உடலுக்கு தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 



 

பிறகு, அமைச்சர் சி.வெ.கணேசனுக்கு ஆறுதல் கூறினார்.பின்னர் அவரது உடலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் பவானி அம்மாள் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அமைச்சர் சி.வெ.கணேசனுக்கு ஆறுதல் கூறினர். அதனை தொடர்ந்து இறந்த அமைச்சரின் மனைவி அவர்களது உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எவ. வேலு, உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஆறுதல் கூறினர். 

 



 

இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பவானி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அமைச்சர் சி.வி. கணேசனுக்கு ஆறுதல் கூறினார். மேலும், திமுக மற்றும் இதர அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த வருடம் அமைச்சர் கணேசன் அவர்களின் மூத்த மகள் கொரோனவால் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு வருடத்திர்க்குள் அவரது மனைவியின் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.