விழுப்புரம்: பைத்திகாரர் ஒருவரை தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதால் குல தெய்வ வழிபாட்டை ஒழிக்கனும் என்கிறார். அதனால்தான் நான் அவர் கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் என கூறியிருந்ததாகவும் சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனும் அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.


மேடையில் பேசிய சீமான்..


வெற்றி வரும் போது துள்ளிகுதிப்பதும் தோல்வி வரும்போது துவண்டு நிற்பது எங்கள் இயக்கம் அல்ல, இடைத்தேர்தலை இடைத்தேர்தலாக கருதாமல் கடைத்தேர்தலாக கருதுகிறேன், நாம் தமிழர் கட்சிக்கும் திமுகவிற்கும் தான் இங்கு போட்டி , தீய திராவிடத்திற்கு தூய தமிழ் தேசியத்திற்கும் தான் இங்கு போட்டி. ஆட்டிலும் மாட்டிலும் வீரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்தது தான் தமிழர் பண்பாடு தேர்தலில் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது எவருக்கும் சமரசம் செய்ததில்லை நோட்டுக்கும் சீட்டுக்கும் பேரம் நடத்திற்கு ஆனால் நாங்க செல்லவில்லை என்றும் இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மீண்டும் 2026 தேர்தலில் அபிநயா தான் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார்.


ஊழல் கூட்டத்தில் ஒருத்தரை அனுப்புவதை விட ஊழலை அழிக்க போராடும் ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள். புரட்சிகர மாறுதல் ஒரு புள்ளியிலிருந்து தான் தொடங்குகிறது, தனி ஒருவன் சீமான் 36 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளேன், ஏகப்பட்ட சவால்களை சந்தித்து வருகிறேன்.


சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது அரசா தரிசா


நாட்டை ஆளுகின்ற பாஜக ஏன் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என கேள்வி எழுப்பினார். திமுக சாராயக்கடை, நாம் தமிழர் கள்ளூக்கடை நேருக்கு நேர் மோதலாம் என்றும் திராவிட பன்னிகளை ஒட்டி தின்னுகிற உன்னிகளாக இவர்கள் திகழ்வதாகவும், கெட்டதை செய்திறதெல்லாம் திராவிட கட்சிகள் தான் காவலர்களுக்கு பஞ்ச படி கொடுக்கவில்லை ராணுவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை  வெள்ளத்தில் இறந்தவர்களும், பயிர்சேதத்திற்கு நிவாரணம் வழங்காமல் சாராயம் குடித்தவனுக்கு நிவாரணம் வழங்குவது அரசா தரிசா என கேள்வி எழுப்பினார்.


கனிமொழி எங்கே போனார் ?


குடும்பதலைவிக்கு ஆயிரம், ஆனால் குடித்து இறந்தால் பத்து லட்சம் எதிர்கட்சியாக இருக்கும் போது கனிமொழி விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழக உள்ளது என தெரிவித்தார். ஆனால் இப்போ எங்கே போனார். தமிழகத்தில் திமுக ஆட்சி இல்லை கொடுங்கோன்மை கேவலமான ஆட்சி மன்னை பற்றியோ மக்களை பற்றியோ கவலை படுவதில்லை அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பதாக கூறும் ஸ்டாலின் தெருவிற்கு தெரு மதுகடைகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.


டாஸ்மாக் பாதுகாப்பிற்கு சேமிப்பு கிடங்கு இருக்கிறது ஆனால் உணவு பொருளை பாதுகாக்கிற சேமிப்பு கிடங்குகள் இல்லை, என் வீட்டையும் காட்டையும் அடமானம் வைப்பேன் ஆனால் தன்மானத்தையும் இனமானத்தை வைக்க மாட்டேன் என்றும் திராவிட அரசியல் என்பது திருடுவது கொள்ளையடிப்பது திரும்ப திரும்ப பதவிக்கு வருவது தான். விஜய பிரபாகரன் வெற்றி பெற்றுவிடுவான் என நம்பியதாகவும் ஆனால் நாலாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததாக அறிவித்தார்கள்.


எல்லா நாட்டிலும் தேசிய மதுபானம் இருக்கிறது எமது நாட்டில் தென்னம்பால், கள்ளு இருக்கிறது அதை ஏன் திறக்க மாட்டுகிறீர்கள் என்றும் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் மதுபான தொழிற்சாலைகள் இருக்கிறது என தெரிவித்தார்.


பைத்திகாரர் ஒருவரை ஆளுநராக நியமிக்கப்பட்டதால் குல தெய்வ வழிபாட்டை ஒழிக்கனும் என்கிறார். அதனால் தான் நான் அவர் கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் என கூறியிருந்ததேன்.


சாதிவாரி கணக்கெடுப்பு


சாதியை ஒழிக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனும் அப்போது தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். தமிழகத்தில் எந்த நச்சு திட்டங்கள் கொண்டுவந்தாலும் காங்கிரசும், திமுகவும் இருக்கும் கள்ளக்குறிச்சி விஷசாராய உயிரிழப்பிற்கு மோடி, ராகுலின் பதில் என்ன ? கிருஷ்ணகிரி எம்.பி தமிழன் வாக்கில் தெலுங்கில் பதவி ஏற்று கொள்கிறார், பேசாமல் விஷம் குடுத்து செத்து போயிடலாம் என்றும் கச்சத்தீவு மீட்க்கவில்லை, காவிரி பிரச்சனை தீர்க்கல, சாதி பார்த்து யாரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் அது தீட்டாகிவிடும் என்றும் அதிமுகவும் தேமுதிக நிர்வாககள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தினார்.