தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள்  முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென  மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஸ்க்ரப் வைரஸ் :


ஓரியன்டியா சுட்சுகாமுஷி' என்ற ஒட்டுண்ணியால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். இந்நோய் முதலில்  ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஆசிய-பசிபிக் பகுதியில் ஸ்க்ரப் டைபஸ் பரவுகிறது. 

 

தற்போது தமிழகத்தில் தெற்கு மாவட்டங்களில் இதுபோன்ற நோய்கள் பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்க்ரப் டைபஸ் நோயின் அறிகுறிகள் :


காய்ச்சல், உடல் வலி, தலை வலி, குறிப்பாக கருப்பு காயங்கள் உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும்.

யார் யாருக்கெல்லாம் ஸ்க்ரப் டைபஸ் நோய் பரவும் :


விவசாய தொழிலில் ஈடுபடும் நபர்கள், புதர் பகுதிகள் நிறைந்த இடத்தில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

பரிசோதனை :


5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ஐஜிஎம் ஆன்ட்டிபாடி, எலிசா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். 

 

ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் அளித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்பது எப்படி?


இந்த தொற்றுக்கு தடுப்பூசி இல்லாததால், நோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டிராம்பிகுலிட் மைட் (Trombiculid mite) எனப்படும் ரசாயனம் கலந்திருக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். விவசாய வேலைகளுக்கு செல்பவர்கள்  உடலை மறைக்கும் அளவிற்கு துணிகளை அணிந்து செல்ல வேண்டும்.

 

இது பொதுவாகவே, கொசுவத்தி சுருள், ஸ்ப்ரே போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. செடிகள் இருக்கும் இடத்தில் இந்த பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

 

எனவே சாதாரண சளி காய்ச்சல் பூச்சி கடி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அணுகி, முறையான சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர் ஜோதி அறிவுரை வழங்கியுள்ளார்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்க்ரப் டைபஸ்...


விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சலில் சிகிச்சை பெற்றுவருகின்றனரா என மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, “கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதிவரை மாவட்டத்தில் சாதாரண காய்ச்சலில் 129 பேரும், டெங்குவில் 14 பேரும், சிக்கன்குனியா ஒருவரும், ஸ்க்ரப் டைபஸ்' 6 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படாது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றனர்.