விழுப்புரம் சண்முகாபுரத்தை சேர்ந்த 10 வயது தனியார் பள்ளி மாணவன்  சரவணன் சிறு வயதிலேயே பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றுவதில் சிறந்த மாணவனாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் டி என் ஆர் எஸ் அன்பு சிலம்பம் அகாடமி சார்பில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி  தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் அதே பகுதியை சார்ந்த சரவணன் என்ற பள்ளி மாணவன் சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, கழி சிலம்பம்,கத்தி சிலம்பம் என்ற பல்வேறு வகையான சிலம்ப வகைகளை தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் சுற்றி சாதனை படைத்தார். இந்த சாதனையை நோபல் வேல்டு ரெக்கார்டு அமைப்பினர் வீடியோவாக பதிவு செய்து சாதனையை அங்கீகரித்து நோபல் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பெற செய்து அதற்கான சான்றிதழினை வழங்கினர். இதுவரை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் மட்டுமே சிலம்பம் சுற்றியது நோபல் வேல்டு ரெக்கார்டு சாதனை இருந்த நிலையில் இரண்டு மணி நேரம் பத்து வயது சிறுவன் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றியது புதிய சாதனையாக நோபல் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இன்று பதிவு செய்தனர்.


சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.


சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை விழுப்புரம், திருவள்ளூர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.


 


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண