புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி இயங்கி வருகின்றது. இங்கு தினந்தோறும் அதிகளவு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனைகளில் கேண்டீன் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இங்கு மூன்றாயத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் தினந்தோறும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் என அனைவரும் பயன் பெறும் வகையில் மருத்துவமனையின் நிர்வாக பிரிவு கட்டிடத்தின் பின்புறத்தில் நிர்வாக கேண்டீன் அமைந்துள்ளது. மேலும் இந்த கேண்டீனில் குறைந்த விலையில் உணவு தருவதால் தினந்தோறும் பலர் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் காலையில் அந்த கேண்டீனில் அமர்ந்து காலை உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஊழியர் சாப்பிட்ட சாம்பாரில் அட்டைப்பூச்சி மிதந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கேண்டீன் நிர்வாகியிடம் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
ஆனால் இவ்வாறு நடந்ததற்கு கேண்டீன் நிர்வாகிகள் பொறுப்பில்லாமல் சரியாக பதில் அளிக்கவில்லை. அதனால் அந்த ஊழியர் சாப்பிடாமல் எழுந்து சென்றார். அப்போது அங்கிருந்த மற்றொரு ஊழியர் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகின்றது. மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜிப்மர் மருத்துவமனை கேண்டீன் உணவை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாகவே உணவு தரம் இல்லாதது தொடர்பாக இந்த கேண்டின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கேண்டீன்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்