உங்களுக்கு நிவாரண தொகை வந்துவிட்டதா ?.. QR Code ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்

புதுச்சேரி அரசு அறிவித்த ஃபெஞ்சல் புயல் நிவாரணம் ரூ.5000 அனைத்து ரேஷன் கார்டுகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடி பரிமாற்ற முறை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

 ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. குறிப்பாக தமிழத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்தது. திருவண்ணாமலையில் பலரும் வீடுகளை இழந்து பெரிதும் சிரமப்பட்டனர். தமிழகத்தை தாண்டி புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ மழையும், புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ மழையும், காரைக்காலில் 16.9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. எதிர்பார்த்ததை விட புதுச்சேரியில் அதிக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Continues below advertisement

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் வெள்ளத்தில் நாசமானது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு படகில் சென்று வீடுகளில் சிக்கியிருந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை அரசின் உதவியுடன் மீட்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண உதவிகளை அறிவித்தார். இது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நிம்மதியை தந்தது. அதனபடி மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் வெள்ளத்தில் நாசமானது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு படகில் சென்று வீடுகளில் சிக்கியிருந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகளை அரசின் உதவியுடன் மீட்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண உதவிகளை அறிவித்தார். இது அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நிம்மதியை தந்தது. அதனபடி மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5000 வீதம் நிவாரண தொகை

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள 3,54,726 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தலா 5000 வீதம் நிவாரண தொகை, குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. சிலருக்கு நிவாரண தொகை வரவில்லை எனவும், குடும்பத்தில் யாருடைய வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்பட்டது என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

இதனால் குடும்பத்தில் யாருடைய வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் அறிய குடிமைப்பொருள் வழங்கல் துறை இணையதள முகவரி மற்றும் கியூ ஆர் கோடு வெளியிட்டுள்ளது.

குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி அரசு அறிவித்த பெஞ்சல் புயல் நிவாரணம் ரூ. 5000, புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த அனைத்து ரேஷன் கார்டுகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடி பரிமாற்ற முறை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் இணையதள லிங்க் அல்லது கியூஆர் கோடு மூலம் வரவு வைக்கப்பட்டுள்ள விபரத்தினை அறிந்து கொள்ளலாம். https://pdsswo.py.gov.in/helpdesk/ என்ற பக்கத்திலும், கியூ ஆர்கோடு மூலம் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Continues below advertisement