விழுப்புரம்: தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 1987ம் ஆண்டு வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகள் திருவுருவ படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.


இதனை தொடர்ந்து பாமகத்தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது,


இன்று தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவசிலைக்கு ராமதாஸ் மரியாதை செலுத்தி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கைதை முழுமையாக ஏற்ற கட்சி பாமக. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக்கொண்டுள்ளனர்.


பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் திமுக செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதல்வருக்கு ஆர்வமில்லை. சாதிபாரி கணக்கெடுப்பாக 45 ஆண்டுகளாக பாமக போராடிவருகிறது. 


பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்அ தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை.


1987ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக அண்மையில் அரசு வெளியிட்டது பொய் கணக்குதான். கலைஞர் இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். 


அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள். 21 பட்டியல் இன எம் எல் ஏக்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம் எல் ஏக்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்யவேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்கவேண்டும். டாஸ்மாக்குக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக ஜெகத் ரட்சகன் எம்பிக்கு கலைஞர் விருது அளிக்கப்பட்டதோ என கேள்வி எழுப்பினார்.