ஆரோவில்லில் அவசர மருத்துவ சேவைகளில் புரட்சி! அதிநவீன வசதிகளுடன் மக்களின் நல்வாழ்விற்கு ஒரு படி!
புதிய ஆம்புலன்ஸ் எங்கள் சமூகத்திற்கு அவசர மருத்துவ சேவைகளை விரைவாகவும் திறம்படவும் வழங்கும் திறனை மேம்படுத்தும்.

விழுப்புரம்: ஆரோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், ஆரோவில் அறக்கட்டளை இன்று ஜிஇஎம் (GEM) தளத்தின் மூலம் பெற்ற புதிய, முழுமையாக அமைக்கப்பட்ட ஆம்புலன்சை அறிமுகம் செய்தனர்.
ஆரோவில் அறக்கட்டளையின் புதிய ஆம்புலன்ஸ் தொடக்கம்:
ஆரோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், ஆரோவில் அறக்கட்டளை இன்று ஜிஇஎம் (GEM) தளத்தின் மூலம் பெற்ற புதிய, முழுமையாக அமைக்கப்பட்ட ஆம்புலன்சை அறிமுகப்படுத்தியது.
இந்த நவீன ஆம்புலன்சை குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளருமான டாக்டர் ஜெயந்தி எஸ். ரவி, ஐஏஎஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில ஆளுநரின் செயலாளரும், சுற்றுலா மற்றும் மீன்வளத்துறை செயலாளருமான டி. மணிகண்டன், ஐஏஎஸ் அவர்கள், ஆரோவில் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆரோவில் சுகாதார சேவை
வக்க விழாவிற்குப் பிறகு, இந்த ஆம்புலன்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆரோவில் சுகாதார சேவைக்கு ஒப்படைக்கப்பட்டது. இது, ஆரோவில் மற்றும் அதன் புறநகரப் பகுதிகளுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்கும் அறக்கட்டளையின் முயற்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ், ஆரோவில் அறக்கட்டளையின் மருத்துவ அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் முதலீடாகும்.
“இந்த புதிய ஆம்புலன்ஸ் எங்கள் சமூகத்திற்கு அவசர மருத்துவ சேவைகளை விரைவாகவும் திறம்படவும் வழங்கும் திறனை மேம்படுத்தும். இது எங்கள் சுகாதார அடித்தளத்தை வலுப்படுத்தும் ஆரோவில் அறக்கட்டளையின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது,” என்று நிகழ்ச்சியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த ஆம்புலன்ஸ், ஆரோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அவசர மருத்துவ சேவைகளின் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















