Watch video: சந்தனக்கூடு விழாவில் சிலம்பம் சுற்றிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் - வைரல் வீடியோ..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் சிலம்பம் சுற்றிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகரில் பாபா அவுலியா தர்காவின் 25 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டு பின்பு சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார். இதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் சமபோஜன பந்தி தயார் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் சந்தன கூடு விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

 

ஏர்வாடி சந்தனக்கூடு விழா :-

ஏர்வாடி சந்தனக்கூடு விழா என்பது ஏர்வாடி தர்காவில் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா ஓலியல்லாஹ்வின் ஆண்டு நினைவைக்கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது ஒரு மாதம் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது, இஸ்லாமிய மாதமான து-அல்-கியாதாவில் கொண்டாடப்படுகிறது. சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷாவின் பாதுஷா நாயகம் அடக்க தலம் எர்வாடி தர்காவில் உள்ளது. ஏர்வாடி தர்காவானது, மத நல்லிணக்கத்தின் சின்னமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டிலிருந்தும் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் அனைத்து மதத்தைச்சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். பொதுவாக மாவட்ட நிர்வாகம் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கிறது. மாநில அரசு மற்றும் தமிழக போக்குவரத்துக் கழகமும் இணைந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ஏர்வாடிக்கு ஆயிரக்கணக்கான சிறப்புப்பேருந்துகளை இயக்குகிறது.

11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola