மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா 4 ஆம் தேதி நடைபெறுவதயெட்டி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Continues below advertisement
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 04.03.2025 அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 04.03.2025 அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
 
மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும், மேலும் மாணவ/மாணவியர்களுக்கு 04.03.2025 பள்ளி அன்று இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 04.03.2025 (செவ்வாய் கிழமை)-க்குப் பதிலாக 15.03.2025 (சனிக்கிழமை) பணி நாள் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷேக் அப்துல் ரஹ்மான்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிப்பெருவிழா விவரம் இதோ உங்களுக்காக

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலையில் கோபால விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளும். இரவு 9 மணிக்கு கொடியேற்றம், அதன் பிறகு சக்தி கரகமும் நடைபெறும். 27-ந்தேதி, காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் மயானக்கொள்ளை விழாவும், இரவு ஆண் பூதவாகனத்தில் சாமி வீதி உலாவும்,

Continues below advertisement

28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கநிற மரப் பல்லக்கிலும், இரவு பெண்பூத வாகனத்திலும், 01-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 02-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் தீமிதி விழாவும், இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 03-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 04-ந் தேதி (செவ்வாய்கிழமை) பிற்பகல் 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

05-ந் தேதி (புதன்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 06-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 07-ந் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 8-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் பூசாரி, பூசாரி தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
Continues below advertisement