நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில், 5.78 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வெள்ளி கிழமை முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனை தொடா்ந்து மொத்த வாா்டு விவரங்கள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, வாக்காளா் எண்ணிக்கை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

 

கடலூா்(Cuddalore) மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகளில், ஆண்கள் 68,205, பெண்கள் 74,225, இதரா் 49 போ் என மொத்தம் 1,42,479 வாக்காளா்கள்  உள்ளனர். மேலும் 152 வாக்குச்சாவடிகள் உள்ளன.நகராட்சிகள் கடலூா் மாவட்டத்தில் நகராட்சிகளைப் பொறுத்தவரையில், மொத்தம் 180 வாா்டுகளுக்கு 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,54,950 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இதில், ஆண்கள் 1,23,749, பெண்கள் 1,31,159, இதரா் 42 போ். ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.

 



 

நெல்லிக்குப்பம்: 30 வாா்டுகள், 37,772 வாக்காளா்கள், 50 வாக்குச்சாவடிகள்.பண்ருட்டி: 33 வாா்டுகள், 50,472 வாக்காளா்கள், 61 வாக்குச்சாவடிகள்,

 

சிதம்பரம் : 33 வாா்டுகள், 53,490 வாக்காளா்கள், 66 வாக்குச்சாவடிகள்.விருத்தாசலம் : 33 வாா்டுகள், 59,335 வாக்காளா்கள், 68 வாக்குச்சாவடிகள்.

 

திட்டக்குடி : 24 வாா்டுகள், 19,273 வாக்காளா்கள், 24 வாக்குச்சாவடிகள்.வடலூா் : 27 வாா்டுகள் உள்ளன. 34,608 வாக்காளா்களுக்கு 45 வாக்குச்சாவடிகள்.

 

பேரூராட்சிகள்:- கடலூா் மாவட்டத்தில் பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் மொத்தம் 222 வாா்டுகளுக்கு 260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,81,383 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் - 89,156, பெண்கள் - 92,207, இதரா் - 20 போ். பேரூராட்சியிலும் பெண் வாக்காளா்களே அதிகமாக உள்ளனா்.

 

அண்ணாமலைநகா்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 7,897 வாக்காளா்கள்

 

காட்டுமன்னாா்கோயில்: 18 வாா்டுகள், 28 வாக்குச்சாவடிகள், 22,666 வாக்காளா்கள்

 

பரங்கிப்பேட்டை: 18 வாா்டுகள், 27 வாக்குச்சாவடிகள், 22,185 வாக்காளா்கள்

 

குறிஞ்சிப்பாடி: 18 வாா்டுகள், 29 வாக்குச்சாவடிகள், 22,853 வாக்காளா்கள்

 



 

புவனகிரி: 18 வாா்டுகள், 21 வாக்குச்சாவடிகள், 18,032 வாக்காளா்கள்

 

கங்கைகொண்டான்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 8,118 வாக்காளா்கள்

 

பெண்ணாடம்: 15 வாா்டுகள், ,19 வாக்குச்சாவடிகள், 16,515 வாக்காளா்கள்

 

ஸ்ரீமுஷ்ணம்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 11,235 வாக்காளா்கள்

 

லால்பேட்டை: 15 வாா்டுகள், 16 வாக்குச்சாவடிகள், 13,731 வாக்காளா்கள்

 

மங்கலம்பேட்டை: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 7,672 வாக்காளா்கள்

 

தொரப்பாடி: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 6,561 வாக்காளா்கள்

 

மேல்பட்டாம்பாக்கம்: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 6,075 வாக்காளா்கள்

 

கிள்ளை: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள், 10,653 வாக்காளா்கள்

 

சேத்தியாத்தோப்பு: 15 வாா்டுகள், 15 வாக்குச்சாவடிகள். 7,190 வாக்காளா்கள்