மேலும் அறிய
புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு ! திடீரென வந்த அறிவிப்பு - என்ன காரணம்?
புதுச்சேரியில் வரும் 10 தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு.

புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
Source : ABP NADU
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தவரின் சிறப்பு விழா. இந்த ஜெயந்தி மகாவீரர் சுவாமிகளின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. சமண மதத்தின் 24-ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீர் சுவாமி. அவர் கிமு 599 ஆண்டில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது தந்தை மன்னர் சித்தார்த்தர் மற்றும் தாய் ராணி திரிஷாலா. அவரது குழந்தை பருவ பெயர் வர்தமான்.
புதுச்சேரி பகுதியில் வரும் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுவதாக கலால் துறை தெரிவித்துள்ளது.
இதே போல் சென்னையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற வரும் 10ம் தேதி (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















