மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நிறுத்தம் ஏற்பட கூட்டுப் பிரார்த்தனை - மூம் மதத்தினர் பங்கேற்பு
அமைதி பிரார்த்தனையில் ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது.
ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட வேண்டியும், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கி-சிரியா நாட்டு மக்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்று வாழ்ந்திடவும் காரைக்காலில் உலக சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் மூம் மதத்தினர் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காமராஜர் திடலில் ஆலிவ் பாஸ் உலக சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் உலக அமைதிக்காக சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
அமைப்பின் தலைவர்கள் முகமது ஹம்ஜா மாலிமர்,தெய்வ சகாயம், பியர் ராஜு சுந்தரம் தலைமையிலும் அமைப்பின் பொதுச் செயலாளர் தங்க சாத்மீகம் முன்னிலையிலும் நடைபெற்ற அமைதி பிரார்த்தனையில் ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கி-உக்ரைன் நாட்டு மக்கள் மீண்டும் புதுவாழ்வு பெற்று வாழ்ந்திடவும் மூம் மதத்தினர் ஒன்றிணைந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் மக்கள் தொடர்பு அதிகாரி ரஞ்சன் கார்த்திகேயன் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion