கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இன்று சாகை வார்த்தலுடன் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் கூவாகம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று   சாகை வார்த்தலுடன் கூழ் ஊற்றி தொடங்கியது. இந்த திருவிழாவானது அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நாளான மே 1-ந்தேதி கம்பம் நிறுத்தல், 2-ந்தேதி இரவு சுவாமி கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்று கொள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.


முன்னதாக மிஸ் கூவாகம் இறுதிப் போட்டி விழுப்புரத்தில் மே 1 ஆம் தேதி நடைபெறுவதாகவும் கூவாகம் திருவிழாவின் போது விடுதிகளில் அதிகளவு கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்து விடுதிகளில் வசூலிக்கப்படுவதாக தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளனர். 


தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு இணை செயலாளர் அருணா, இந்த வருடம் கூவாகம் திருவிழாவின் 50 சதவிகித போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறுகிற நிலையில் மிஸ்கூவாகம் இறுதி போட்டி  விழுப்புரம் தளபதி திடலில் மே 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கூவாகம் திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரத்திற்கு வருகை புரியும் திருநங்கைகளிடம் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிப்பதாகவும் எத்தனை முறை புகார் அளித்தாலும் விடுதியின் மீது மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ரூ.2 ஆயிரம் வசூலிக்கும் விடுதிகள் தங்களிடம் 8 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் இந்த வருடம் கூவாகத்தில் பகுதியில் டெண்ட் அமைத்து தங்க விருப்பதாகவும் 40 வயது பூர்த்தியடைந்த திருநங்கைகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் திருநங்கைகளின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெற ரயில்வே, அரசு மருத்துவமனைகளில் கேண்டீன்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண