விழுப்புரம் அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழக அரசு கள் இறக்க அனுமதி வழங்ககோரி பனை ஏறும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பனைமரத்தில் இருந்து கள் இறக்கி பருகி சந்தைபடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தமிழகத்தில் 85 ஆண்டுகளாக கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கு தடை இல்லாத போது தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி இன்று விழுப்புரத்தை அடுத்த பூரி குடிசை பகுதியில் 100க்கும் மேற்பட்ட பனை தொழிலாளிகள் குடும்பத்துடன் பனை மரத்தில் ருந்து கள் இறக்கி கள்ளினை இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடந்து 50 க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் பனை மரத்தில் ஏறி தங்கள் கிராமத்தில் முக்கிய வாழ்வாதாரமாக இருக்க கூடிய கள் இறக்க அனுமதி வேண்டுமென கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.






 


மேலும் பனை தொழிலாளிகள் மீது மது விலக்கு சட்டத்துக்கு புறம்பாக சாராய வழக்கு போட கூடாது எனவும் பூரிகுடிசை பகுதியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த தலைமுறையினர் இத்தொழிலை செய்ய முடியாத சூழல் உள்ளதால்  கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என கையில் பதாகைகளை ஏந்தி  தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.