விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடைசெய்ய வலியுறுத்தியும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம், தேர்தல் நேரத்தில் திமுக  தலைவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை எனவும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்து  தற்போது 15 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை எதையும் செய்யவில்லை என தெரிவித்தார். திமுக அரசுக்கு வாக்களித்த மக்களை கொச்சப்படுத்தி கேவலப்படுத்தி திமுக அரசு செயல்படுவதாகவும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தினை பறித்த அரசாகவும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தை நிறுத்தி, அம்மா உணவகத்தை  முடக்கி ஏழை, எளிய மக்கள் முன்னேற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளதாக கூறினார். திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கொரனோ காலத்திலும் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.




ஆனால், திமுக ஆட்சிக்கு வரும்போது வரி வருவாய் கூடிய போதும் விலைவாசி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் ஒரு டன் கம்பி 34 ஆயிரம் இருந்தது தற்போது திமுக ஆட்சியில் ஒரு டன் கம்பி 84 ஆயிரம் உயர்ந்து சிமெண்ட் விலையும் அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிமெண்ட், கம்பி விலை உயர்ந்து விடுவதாகவும், தைரியம், மனமிருந்தால் சிமெண்ட் விலையை தமிழக முதல்வரால் குறைக்கமுடியுமா என்றும் திமுக பினாமிகளால் தான் சிமெண்ட் ஆலைகள் நடத்தப்படுவதாகவும், திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு இல்லை என்பதால் நூறு நாள் வேலைவாய்ப்பில் வேலை செய்யும் பணி அதிகரித்துள்ளதாகவும், ஏழை மக்களின் பணத்தை திமுக அரசு கொள்ளை அடித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகிற அரிசி, பருப்பு, தானியம், பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் 5 சதவிகித வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆய்வு கூட்டத்தில் ஏன் 5 சதவிகித வரி விதிப்பிற்கு நிதி அமைச்சர் எதிர்க்கவில்லை எனவும் இதுகுறித்து ஏன் முதலமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை என்றும் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாமல் கனவு உலகத்தில் தமிழக முதல்வர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கருணாநிதிக்கு அவர்களிடத்தில் இருந்த நிர்வாக திறமை ஸ்டாலினிடம் இல்லை ஆனால் கொள்ளை அடிக்கும் திறன் மட்டும் கருணாநிதியை போன்று உள்ளதாக கூறினார். வரி உயர்வு எல்லாத்துக்கும் மத்திய அரசை தமிழக அரசு குற்றஞ்சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், இன்று வீட்டு உபயோக மின்சார கண்டன உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசு அடுத்து விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்த சொல்வார்கள் எனவும் மத்திய அரசை எதிர்க்கும் அரசாக திமுக அரசு இல்லை என தெரிவித்தார். டெல்லியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் தங்களை காப்பாத்தி கொள்ள தான் செயல்படுவதாகவும்,




மிகப்பெரிய தவறை திமுக அரசு செய்துள்ளதாகவும் அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையை ஓ. பன்னீர் செல்வம் சூறையாடவில்லை திமுகவினர் தான் சூறையாடி உள்ளதாகவும் இவர்களுக்கு துணையாக காவலர்கள் இருந்தார்கள் என குற்றசாட்டினார். ஓபிஎஸ் போல நாங்கள் பச்சோந்திகள் அல்ல அதிமுகவில் ஒரு ஒரு காலத்தில் ஒரு ஒரு துரோகிகள் வருவார்கள் பன்னீர் செல்வத்தை வைத்து அதிமுக இயக்கத்தை உடைக்கலாம் கலவரம் செய்யலாம் என ஸ்டாலின் நினைக்க வேண்டாம் என்றும் தன்னுடை சுயநலத்திற்காக எதையும் எப்போதும் ஓபிஎஸ் பலி கொடுக்க தயங்க மாட்டார் உள்கட்சி பிரச்னையில் நல்ல எண்ணத்தில் துணை முதல்வராக ஆக்கப்பட்டார்.


ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பின் சசிகலா மீது கொலை பழி சுமத்தியவர் தான் அவர் என தெரிவித்தார். ஸ்டாலின் தமிழகத்தில் பொறுப்பேற்றதில் இருந்து கூட்டு பாலியல் அதிகரித்துள்ளதாகவும் பள்ளி கல்வி துறை பாலியல் வன்கொடுமை துறையாக மாறியுள்ளதாகவும் தமிழகத்தில் வன்முறை பாலியல் வன்கொடுமை நடைபெறுவதற்கு காரணம் கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவைகள் சர்வசாதாரணமாக கிடைப்பதாகவும் மாணவர்கள் கஞ்சாவால் சீரழிந்து வருவதாக கூறினார்.


கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏன் அமைச்சர்கள் சென்று மாணவியின் குடும்பத்தாரை சந்திக்கவில்லை எனவும் ஒரே குடும்பம் தமிழகத்தை சூறையாடி கொண்டிருப்பதாகவும் தமிழகத்தின் காவல் துறையை நிர்வகிப்பது திமுக நிர்வாகிகள் தான் என்றும் போதை பொருட்கள் அதிகரித்து நிர்வாக திறமையற்ற ஆள தகுதியில்லாத, அமைச்சர்களை கட்டுக்குள் வைத்துகொள்ளாத முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண