விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த  அப்பகுதிமக்கள் திமுக வார்டு கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்தபோதிலும் அவரையும் விட்டு வைக்காமல் தெரு நாய்கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பொதுமக்களை கடித்துகுதறிய தெருநாய் 


விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ளவர்களை தெருநாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகத்தினர் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது

அலட்சியமாக செயல்படும் நகராட்சி நிர்வாகம் 


இதனால் தற்போது வரை 10-க்கும் மேறட்டோரை கடித்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவரக்ள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் தெருநாய்களை பிடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வந்த தெருநாய்கள் இன்றைய தினம் அப்பகுதி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் மகிமை பிரியாவையும் விட்டு வைக்காமல் காலில் கடித்து குதறி வைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இருப்பினும் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.