விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தீபாவளி நெரிசல்: 63,000 வாகனங்கள் கடந்து சென்றன! உங்க ஊருக்குப் போக முடியலையா?
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்று செல்கின்றன

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்று செல்கின்றன. சுங்கசாவடியை 63000 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.
திணறும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்து, ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்துவிட்டன. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் புறப்பட்டதால் சென்ட்ரல் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
தீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து அதிகமானோர் தென் மாவட்டங்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகை, திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து தொடர் விடுமுறை தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் காரில் பயணம் செய்து செல்கின்றனர். இதனால் அதிகளவில் கார்கள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.
விக்கிரவாண்டி இருவேல் பட்டு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளாகியதால் போக்குவரத்து போலீசாரும் டோல்கேட் ஊழியர்களும் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்கசாவடியை கடந்த 63000 ஆயிரம் வாகனங்கள்
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வழக்கமாக செல்லும் ஆறு வழிகளில் கூடுதலாக இரண்டு வழிகள் திறகப்பட்டு 8 வழிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கபட்டு வருகின்றன. நேற்றைய தினம் மட்டும் 48,000 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்ற நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை மட்டும் 15000 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளன. தற்போது வரை சுங்கசாவடியை 63000 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளது.





















