விழுப்புரம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட மாணவர்களின் தேர்ச்சியில் குளறுபடியால் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று வழங்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு தோல்வி என குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று மூன்றாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வருகின்ற புதன்கிழமை அரியர் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பிற்கு முன் மாணவர்கள் மதிப்பெண்களை மறு மதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்துள்ளனர். அந்த மறுமதிப்பீடு தொடர்பாக இதுவரை பல்கலைக்கழகம் முடிவுகள் வெளியிடாததால் அரியர் தேர்வாக எழுத வேண்டுமென கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேர்ச்சியில் குளருபடி நிலவுவதால் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி வாயில் முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த வருடத்தோடு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட உள்ளதால் மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்