திமுகவிற்கு ஒரு சாபக்கேடு உள்ளது! மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - சிவி சண்முகம் பரபரப்பு பேச்சு!
திமுகவிற்கு ஒரு சாபக்கேடு உள்ளது ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - சிவி சண்முகம்!

விழுப்புரம் ; திமுகவிற்கு ஒரு சாபக்கேடு உள்ளது ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது வாரி வாரி வழங்கினாலும் திமுக ஆட்சி அமைக்க முடியாது அதிமுக தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்குமென அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் ஏப்ரல் முதல்வாரத்திலையே வாக்கு பதிவு வரலாம், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
இளைஞர்களுக்கு மகளிருக்கு வாய்ப்பளிக்கிறோம் என மற்ற இயக்கங்களில் முழங்குவார்கள் ஆனால் ஒரு சில குடும்பத்தினருக்கு தான் பதவிகளை அறிவிப்பார்கள் தலைமை எப்படியே அப்படியே தான் கட்சியும் இருக்கும் என திமுகவை விமர்சித்த அவர்
தமிழகத்தில் அதிமுக திமுக தான் மாறி மாறி ஆட்சி அமைத்திருக்கிறது. எப்பவுமே அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு தான் ஊடகமும் பத்திரிக்கைகளும் வெளியிடுகின்றன. அதிமுக வெற்றி பெறாது என தெரிவிப்பார்கள் ஆனால் அதனையும் மீறி அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது என கூறினார்.
திமுக அதிகாரத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி திமுகவிற்கு எதிர்ப்பு இல்லாதது போல் மாயையை திமுக அரசு செய்து வருவதாகவும், மக்கள் எழுச்சிக்கு முன்னாள் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள், ஐந்தாண்டு காலம் செய்ய முடியாத திமுக அரசு தினந்தோறும் பல்வேறு திட்டங்களை அறிவித்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அந்த திட்டத்திற்கு நிதி ஒன்றுமில்லை என தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தேர்தலை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும், திராவிட ஆட்சி அமைய காரணம் மாணவர்களின் எழுச்சி, மாணவர்களின் எழுச்சிதான் அண்ணாவை ஆட்சியில் அமர வைத்தது என குறிப்பிட்டார்.
திமுகவிற்கு ஒரு சாபக்கேடு உள்ளதாகவும், ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது வாரி வாரி வழங்கினாலும் திமுக ஆட்சி அமைக்க முடியாது அதிமுக தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும், பொங்கலுக்கு மூவாயிரம் கொடுத்தார்கள் அடுத்து ஐந்தாயிரம் கொடுத்துள்ளார்கள் எது கொடுத்தும் புண்ணியமில்லை என சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.























