கடலூர்: பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் 15ம் நூற்றாண்டு சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
லக்ண தண்ட நாயக்கர் (Lakna Danda Nayakkar) என்பவர் விஜயநகர பேரரசின் கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராகவும், இரண்டாம் தேவராய மன்னரின் படைத் தளபதியாகவும் இருந்த ஒரு முக்கிய நபர். பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்ட 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பு நாணயம், இவரைச் சார்ந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த செம்பு நாயணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டபோது ஆற்றின் கரையில் 2 செம்பு நாணயங்கள் இருப்பதை கண்டெடுத்தார். பின்னர் அந்த நாணயத்தை ஆய்வு செய்ததில் அவை விஜயநகர காலத்திய நாணயம் என்பதும், இரண்டாம் தேவராய மன்னரின் படைத் தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த “லக்ண தண்ட நாயக்கர்” என்பவரின் நாணயம் என்பது தெரிந்தது.
இரண்டாம் தேவராயரின் அனுமதியுடன் தனது சொந்த பெயரில் இவர் நாணயங்களை அச்சிட்டுள்ளார். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோல் உள்ளது. யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் “ல” என்று உள்ளது. நாணயத்தின் பின்பக்கத்தில் 3 வரிகள் கன்னட எழுத்தில்” கன தனய காரு “என்று உள்ளது என்று புதுச்சேரியில் உள்ள நாணய ஆய்வாளர் பாலாஜி ரவிராஜன் படித்து கூறினார்.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மேற்பரப்பு களஆய்வில் தொடர்ந்து பல தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் ஆய்வாளர் இம்மானுவேல் கூறினார்.
தண்டநாயகர்
மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார். குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிர்வாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை. மகா மண்டலேசுவரர்கள் பேரரசரால் இடமாற்றம் செய்யப்படுவர். விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். (இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உற்வுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது.) விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர்.