கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் அடுத்த பாச்சாரபாளையம் கிராமத்தில் பாச்சாபாளையம் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் தலைவராக இருப்பவர் அதிமுகவை தங்கமணி இவர் தலைமையின் கீழ் உள்ள சங்கத்தில் செயலாளராக ஜெயராமன் இருந்து வருகிறார். இந்த கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்ததாக கூறபடுகிறது. மேலும், இந்த கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக விவசாயிகளுக்கு பயிர் கடனாக தலா இரண்டு ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

 



 

இந்த நிலையில் ஒவ்வொரு இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளிடம் இருந்து கடன் வழங்க கமிஷனாக 5,000 வரை அதிமுக வை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் ஆன தங்கமணியின் அறிவுறுத்தலின் பேரில் கமிஷனாக பெற்றதாகவும் கூறபடுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த கடன் சங்கம் மூலம் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கமிஷனாக ஏழு இலட்சம் வரை கமிஷன் பெற்று உள்ளதாக கூறபடுகிறது. 

 



 

இந்த நிலையில் இது வரை பெற்ற கமிஷன் பணங்களில் தனக்கான பங்கினை பிரித்து தர வேண்டும் என அதே சங்கத்தில் பணி புரியும் அமிர்தலிங்கம் செயலாளர் ஜெயராமனிடம் கேட்டு உள்ளார் அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு திடீரென கைகலப்பாக மாறியதால் அமிர்தலிங்கத்தை செயலாளர் ஜெயராமன் தாக்கினார் இதன் காரணமாக அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் நனைந்தபடி கூட்டுறவு சங்கத்தின் முன்பு செய்வது அறியாது இரத்தகாயங்களுடன் உட்கார்ந்து இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 



 

இவ்வாறு அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு அதிகாரிகள் அன்றாடம் தங்களது வாழ்க்கையை வாழவே கூலி வேலை செய்தும் பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடமும் தங்களது வேலையை செய்வதற்கு என அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதே குற்றமாக கருதப்படும் நிலையில், பெற்ற லஞ்சத்தில் பங்கு கேட்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு முன்னதாக இதே போன்று பொங்கல் கரும்பு ஏற்றுமதிக்கு இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் நேரம் பேசும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய அதே குறிஞ்சிப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.