விழுப்புரம்: தமிழக முதலமைச்சரை தவெக தலைவர் விஜய் அங்கிள் என்று குறிப்பிட்டு பேசியது பெரிய தவறு இல்லை அரசியல் குற்றமில்லை, இது கலைஞர் காலம் இல்லை, டாடி மம்மி என்று அழைத்து வளர்ந்தவர் விஜய் என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

விழுப்புரத்திலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் சே.கு தமிழரசன், தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்பது தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடக்குமா அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்குமா என்பது தெரியவில்லை, ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கும். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை இதற்கு தமிழக அரசு விளக்கத்தினை தரவேண்டும் என வலியுறுத்தினார்.

தலித் மக்களுக்கு தரவேண்டிய பதவிகள் உள்ளாட்சி தேர்தலில் வழங்கபடாமல் உள்ளது. சமூக நீதி திராவிட மாடல் என்று பேசுகிறார்கள். துணை தலைவர் பொறுப்புகளில் இடஒதுக்கீடு முறை இல்லை என்றும் துப்புரவு தொழிலாளி கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கிறார். இழப்பீடு தமிழக அரசு அறிவிக்கிறார்கள். இழப்பீடு ஏற்க கூடியதுதான். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் 400 க்கும் மேற்பட்ட துப்புரவு பணிளாளர்கள் பணியின் போது உயிரிழந்துள்ளதாகவும் தூய்மை பணியாளர்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது.

Continues below advertisement

துப்புரவு பணியாளர்களை வாரணாசிக்கு மோடி அழைத்து சென்று காலை கழுவினால் சரியானதாகிவிடுமா துப்புரவு பணி என்றாலே ஒப்பந்தம் போடப்படுகிறது, துப்புரவு பணியாளர்களை ஏன் நிரந்தரபணியாளர்களாக ஆக்க மாட்டீர்கள் என கேள்வி எழுப்பினார். துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலையே துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டுமா, அர்ச்சகர் பயிற்சி பள்ளி அர்ச்சகர் கல்லூரி என்று வந்துவிட்டது எத்தனை கோவில்களில் தாழ்த்தபட்டவர்கள் கோவில் அர்ச்சகராக உள்ளனர். பத்து பேரை மட்டும் அர்ச்சகராக ஆக்கிவிட்டு புகைப்படம் எடுத்து கொண்டால் போதுமானதா என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் அறிக்கையில் கணக்கெடுப்பு செய்து துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் திமுக அரசு செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார். சாதி ஆவண படுகொலைக்கு கட்டாயம் தடுப்பு சட்டம் கொண்டு வருவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறினார்கள் அதனை செய்யவில்லை, மஹாராஸ்டிராவில் செய்ய முடிவதை ஏன் திராவிட மாடல் அரசால் செய்ய முடியவில்லை என கூறினார். ஆங்கிலத்தில் தமிழக முதலமைச்சரை விஜய் uncle என்று குறிப்பிட்டது ஆங்கிலத்தோடு தமிழ் கலந்துள்ளது. இது கலைஞர் காலம் அல்ல விஜய் காலம் இது பெரிய தவறு இல்லை பெரிய அரசியல் குற்றம் இல்லை.

டாடி மம்மி என்று கூப்பிட்டு வந்தவர் விஜய், அரசியலுக்கு புதியதாக விஜய் வந்திருக்கிறார் மேடை புதியதல்ல புதிய தலைமுறையில் வருகிற தலைவராக உள்ளதாக தெரிவித்தார். இந்திய குடியரசு கட்சி கட்டாயம் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தவெகவுடன் கூட்டணிக்கு அழைத்தால் பரிசீலிப்போம் எந்த அரசியல் கட்சியும் அம்பேத்கர் படத்தை போடாமல் தேர்தலை சந்திக்க முடியாது கூறினார். பாமகவில் தந்தை மகனுக்குமான கருத்து மோதல் என்பது குடும்ப பிரச்சனை இருவரும் அமர்ந்து அரை மணி நேரம் பேசினால் சரியாகிவிடுமென சே கு தமிழரசன் தெரிவித்துள்ளார்.