பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.34 வழங்கி வரும் நிலையில் ரூ.37 ஆக லிட்டருக்கு உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல மக்கள் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். தற்போது மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் நகரம் முழுவதும் புதிய விளக்குகள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது, பொங்கலுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரிசிக்கான நான்கு மாத பணம் மஞ்சள் அட்டை தாரர்களுக்கு 1200 ரூபாயும், சிவப்பு அட்டை தாரர்களுக்கு ரூ. 2400 உடனடியாக செலுத்தப்பட உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.34 வழங்கி வரும் நிலையில் ரூ.37 ஆக லிட்டருக்கு உயர்த்தி வழங்கப்படும்.
வழக்கமாக பொங்கலுக்கான துணி வழங்கப்பட்டு வரும் நிலையில் சிவப்பு அட்டைதாரருக்கு 1 நபருக்கு ரூ.500 (ஒரு நபர் இருந்தால்) 1-க்கும் மேல் உள்ள குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்கப்படும். தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தற்போது இலவசமாக கொடுக்கப்பட வேண்டிய பணம் வங்கிகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றது. ரேசன் கடை திறக்க பட வேண்டும் என்பது அரசின் எண்ணம், அதனை விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் பொருட்கள் அங்கன்வாடி மூலம் வழங்கப்படும். எந்தவித உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ஏற்கனவே அறிவித்த 1000 ரூபாயை ஜனவரிக்குள் வழங்கப்படும்.
மத்திய அரசிடம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். வரும் சட்டமன்ற கூட்டத்தில் மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும். சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்துவோம் என கூறினார்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்