சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது மூசா. இவரது மகன் அப்துல் வாசித். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல காலை பள்ளிக்குச் சென்ற அப்துல் வாசித் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை திண்டிவனம் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த ரயிலில் வந்த அப்துல் வாசித்தை பிடித்து இரும்பு பாதை ரயில்வே போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை இரும்பு பாதை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து இரும்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார். விசாரனையில் படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் சென்றதாக கூறினார்.


பின்னர் சைட்லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அப்துல் வாசித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரயில்வே உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரணை செய்தார். விசாரனையில் படிப்பில் ஆர்வம் இல்லாததாலும், பெற்றோர் திட்டியதாலும் அவர்களிடம் கோபித்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்துல் வாசித்திற்கு அறிவுரைகளை கூறிய போலீசார், அவரது தந்தையிடம் அவனை ஒப்படைத்தனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.