கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1 மற்றும் பணிமனை 2 என இரண்டு பணிமனை இயங்கி வருகிறது இந்த பணிமனையில் இருந்து பேருந்துகள் பழுது நீக்கம் செய்து விருத்தாசலம் பகுதி மற்றும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று விருதாச்சலத்தில் இருந்து டிவி புத்தூர் பாசிகுளம் கிராமத்திற்குச் சென்று 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடன் திரும்பி வந்துகொண்டு இருந்தது அப்படி வரும் பொழுது விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் பிரேக் பிடித்து உள்ளார். ஆனால் திடீரென பேருந்தின் பிரேக் பிடிக்காததால் பேருந்து நிற்காமல் சாலை இறக்கத்தில் நகர தொடங்கியது, மேலும் அந்த நிற்காமல் நீண்ட தூரம் ஓடிச் சென்றது.



 

அப்பொழுது ஓடிக்கொண்டு இருந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சுதாரித்து கொண்டு ஒரு சிலர் பேருந்தை விட்டு கீழே இறங்கி பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர், பின்ன அந்த பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் உதவியுடன் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தை இழுத்து பிடித்து பேருந்தின் சக்கரத்தின் அடியில் கல்லை போட்டு பேருந்தை நிறுத்தினர். பேருந்து நிற்காமல் ஓடியதால் பயணிகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை விட்டு இறங்காமல் அதனை தொடர்ந்து இயக்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. 

 



 

இந்நிலையில் பிரேக் பிடிக்காமல் அரசு பேருந்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுதியது, மேலும் ஒரு அரசு பேருந்து சாலையில் சென்றுகொண்டு இருக்கும் பொழுதே ப்ரேக் பிடிக்காமல் சென்றது எப்படி எனவும் இவ்வாறு பேருந்து ப்ரேக் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை கூட அதிகாரிகள் கவனிக்காமல் இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது எனவும், முக்கிய சாலை என்பதால் பேருந்து மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது வேகமாக வந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது, ஆகவே நகர பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் செலுத்தப்படும் பேருந்துகளை சரியான நிலையில் உள்ளதா என்பதனை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் எனவும் தற்பொழுது பள்ளிகள் இயக்கபடுதால் மாணவர்களும் அதிகம் அரசு பேருந்துகளை பயன்படுத்துவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் அரசு பேருந்துகளின் நிலையினை அவ்வப்பொழுது கவனிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.