விழுப்புரம்: தமிழ்நாட்டில் பட்டியலின சமூதாயம் பாமகவிற்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம் என்றும்  அரசியல் காரணத்திற்காக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கீழ்சிவிரி கிராமத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு  கீழ்சிவிரி கிராமம் அருகே பிரம்மதேசத்தில் செயல்படும் மதுகடை மூடுவதற்கும், மரக்காணம் தாலுக்கா அலுவலகத்தில் கீழ்சிவிரி கிராமம் இணைக்கப்பட்டுள்ளதை திண்டிவனம் தாலுக்காவுடன் இணைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றபட்டது.


அதனை தொடர்ந்து பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்


தமிழ்நாட்டில் இளைஞர்கள் பெரியவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள், தமிழ் சமுதாயத்தினர் மதுவிற்கு அடிமையாகிவிட்டதால், படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டுமெனவும், இந்தியாவிலையே அதிக சாலை விபத்துகள், கல்லீரல் பிரச்சனை, தற்கொலை நடக்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது.


ஆட்சிக்கு வரும் முன் ஆட்சியாளர்கள் நிறைய வாக்குறுதிகள் தருகிறார்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எதனையும் கண்டு கொள்வதில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் மதுவில் வருகின்ற வருமானத்தை வைத்து தான் ஆட்சி நடத்துகிற நிலை தான் உள்ளது.  கஞ்சா போதை பொருள் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 78 வருடம் ஆகிறது. ஆனால் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைத்தால் தான் உண்மையான சுதந்திரம். சொந்த ஊருக்கு வந்து தீர்மானம் நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். 


தமிழகத்தில் இன்றைய சூழலில் மூன்று தலைமுறைகள் மதுவினால் அடிமையாகியுள்ள நிலையில் இப்போதைய தலைமுறை போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும், கஞ்சா போதை பொருட்களை கட்டுபடுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோதே தெரிவித்தேன் மூன்று ஆண்டுகள் கடந்தும் கட்டுபடுத்த நடவடிக்கை இல்லை சர்வசாதாரணமாக போதை பொருட்கள் அமெரிக்காவில் கிடைப்பது போன்று  இங்கு கிடைப்பதாக கூறினார்.


தயவு செய்து 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை காப்பாற்ற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பிற்படுத்தபட்ட சமூகத்தினருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு கிடைத்தது 26 தான் கிடைக்கும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பஞ்சாயத்து தலைவருக்கு அதிகாரம் இருக்கும் போது முதலமைச்சருக்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என பொய் சொல்லி கொண்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சருக்கும் அதிகாரம் இருக்கும் போது இவருக்கு இல்லை என பொய் கூறி கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மதுக்கடைகளை மூடுவதற்கு ஒரு திட்டம் கொண்டு வரவேண்டும்.


தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை  முதலமைச்சராக ஆக்குவோம்


தேர்தல் அரசியலை மட்டும் பார்க்க கூடாது, தமிழ்நாட்டில் பட்டியலின சமுதாயம் பாமகவிற்கு  ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம், தலித் சமுதாயத்தினை சார்ந்தவர்கள் 1998 ஆம் ஆண்டிலேயே மத்திய அமைச்சராக்கியது பாமகதான் என்றும் திமுக 1999ல் தான் பட்டியலின சமுதாயத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கினார்கள் என்றும் மத்திய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவார்கள் அதற்கு முன்பாக சர்வே எடுக்க வேண்டும் மாநில அரசை வலியுறுத்தி வருகிறோம் மத்திய அரசை கணக்கெடுப்பு நடத்த நாங்கள் வலியுறுத்துவதாகவும், அரசியல் காரணத்திற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.