பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.


பள்ளி மாணவர்களை குற்றவாளிகள் போல் பார்க்க நம்மால் முடியாது. அவர்களது பாதுகாப்பு கருதி இப்படி பயணிக்க அவர்களை அனுமதிக்க முடியாது.


பெற்றோர், ஆசிரியர் மீது நடவடிக்கை


குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவலர்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.


போக்குவரத்து கார்ப்பரேஷன் மூலம் நெருக்கடியான நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்கவும், பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


 






படிக்கட்டுகளில் தொங்கி பயணிக்காமல் இருப்பதை தடுப்பதற்காக காவல் துறை கடுமையாக எச்சரித்து வருகிறது.


இந்த செயலில் ஈடுபடும் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப் போகிறாம்” எனத் தெரிவித்துள்ளார்.


சென்னையில் சோதனை


முன்னதாக சென்னை முழுவதும் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் வகையில் போக்குவரத்துக் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவா்களைப் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனா். 


பிற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டு பயணம் செய்து வரும் நிலையில், பேருந்து ஓட்டுநா்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 


இந்தப் பிரச்னையால் காலை மற்றும் மாலை நேரங்களில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.


இந்நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து கூடுதல் ஆணையரின் உத்தரவின்படி தங்கள் காவல் எல்லையில் உள்ள பள்ளிகளில் மாணவா்களிடையே ”படிக்கட்டு பயணம் ஆபத்தானது” என்று கூறி காவலர்கள் விழிப்புணா்வு எற்படுத்தினா். 


பள்ளி, கல்லூரி முதல்வர்களுக்குத் தகவல்


அதைத்தொடா்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி காலை, சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்து காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினா்.


அப்போது பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிக்கட்டு பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களைப் பிடித்து கடுமையாக எச்சரித்தனா். அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோா் மற்றும் அவா்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


குறிப்பாக, வேப்பேரி போக்குவரத்து காவலர்கள், புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் சோதனை நடத்தி ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவா்களை கடுமையாக எச்சரித்தும், கடிதம் எழுதி வாங்கியும் காவலர்கள் அனுப்பி வைத்தனா். மீண்டும் படிக்கட்டுகளில் பயணம் செய்து சிக்கினால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா்கள் எச்சரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.