விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்த மழை நீரால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.


விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை  மழை நீர் முழுமையாக சூழ்ந்ததுள்ளதோடு வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியல் நல்லாவூர், மதுரா  புதூர், உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த  மாணவர்கள் பயின்று வரும் நிலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தவித்து வந்தனர்.


இந்த நிலையில் ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி நிர்வாகம், தூய்மை பணியாளர்களை கொண்டு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வறுகிறது. இதே போன்று மாவட்டத்தில் பல கிராம பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளை ஆய்வு செய்யாமல் பள்ளி கல்வித்துறை அலட்சியம் காட்டி வருவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கனமழை தொடர்வதாலும் அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.