![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருவண்ணாமலையில் ரூ.29.25 கோடியில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை
திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.29.25 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
![திருவண்ணாமலையில் ரூ.29.25 கோடியில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை Tiruvannamalai news rs.29.25 Crore Bhoomi Pooja for setting up integrated vegetable flower market and grocery stores in Tiruvannamalai TNN திருவண்ணாமலையில் ரூ.29.25 கோடியில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/24/5f9da6a0bae9eb6c8365fa50286b28db1682333268180109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை நகராட்சி சுமார் 1.65 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. எனவே, திருவண்ணாமலை நகரின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகியிருக்கிறது. அதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைத்தல், நகரின் சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. மேலும், திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள மாடவீதியில் செயல்படு வரும் காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் ஆகியவை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. போதுமான இடவசதியின்றி, இல்லாமல் நெரிசலான இடத்தில் உள்ளதால், பௌர்ணமி நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் பெரிய அளவில் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, திருவண்ணாமலை நகராட்சி சார்பில், காந்தி நகர் பைபாஸ் சாலை பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நகராட்சிக்கு சொந்தமான 2.67 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 29.25 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட், பழ மார்க்கெட் அமைக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த புதிய மார்க்கெட் வளாகத்தின் தரைதளத்தில் 128 காய்கறி கடைகளும் , முதல் தளத்தில் 128 பூக்கடைகள் மற்றும் பழக்கடைகள் அமைக்கப்படவும். உள்ளது அதுமட்டுமின்றி, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சாய்தள வசதி, கண்காணிப்பு கேமரா, சாலை வசதி, உயர்மின் கோபுர வசதி, வடிநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
அதனையடுத்து, ஒருங்கிணைந்த புதிய காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் வரவேற்றார்.விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, புதிய காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தால் திருவண்ணாமலை நகராட்சியில் போக்குவரத்து நெரிசல் தடுக்கப்படும், அருகிலே புதியதாக மத்திய பேருந்து நிலையம் வரவுள்ளது, இதனால் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி வாங்கி செல்வதற்கும், பயணகாவுள்ளதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)