நாட்றம்பள்ளி அருகே இறை தேடி வந்த மயில் 60 அடி கிணற்றில் விழுந்து இரண்டு நாட்கள் உயிருடன் இருந்த நிலையில் அதை
தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


 

திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செங்குரான்பட்டறை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நடராஜ் என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் மயில் கூவிக்கொண்டிருந்ததை அறிந்த விவசாயி, நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான

தீயணைப்பு வீரர்கள்  விவசாய கிணற்றில் இருந்த ஆண் மயிலை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட ஆண்மயிலை வன அலுவலர் வேலுவிடம்  ஒப்படைக்கப்பட்டது. 

 

அதனைதொடர்ந்து புதுப்பேட்டை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மாம்பாக்கம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் விடப்பட்டது.

 

மேலும் அப்பகுதிமக்கள் கூறுகையில், அப்பகுதிக்கு மயில்கள் இரைதேடி வருவது வழக்கம். அப்படி இரை தேடி வந்த மயில் தவறி கிணற்றில் விழுந்துள்ளது. மேலும் இரண்டு நாட்களாக இந்த கிணற்றிக் இருந்ததாகவும் தெரிவித்தனர்.