தமிழகத்தில் அதிகளவு மழை பெய்யக்கூடிய தரக்கூடிய வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையினால். இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் இன்று மதியம் வரை தொடர்ந்து மிதமான சாரல் மழையும், சில பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த தொடர் சாரல் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கத்தில் 18 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர்-16 மி.மீ, தண்டராம்பட்டு- 17 மி.மீ, போளூர்- 16.60 மி.மீ, செய்யாறு- 53 மி.மீ, வெம்பாக்கம்- 36 மி.மீ, ஜமுனாமரத்தூர்- 13 மி.மீ, வந்தவாசி- 51.20 மி.மீ, சேத்துப்பட்டு- 25.40 மி.மீ, ஆரணி-20 மி.மீ, கலசபாக்கம்-41.10 மி.மீ, திருவண்ணாமலை-46 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறையின் கீழ் 600 பெரிய ஏரிகள் உள்ளது. இதில் 186 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 55 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலும், 85 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும், 204 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலும் தண்ணீர் உள்ளது. மற்ற 70 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் உள்ளது.
அதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 18 ஒன்றியங்களிலும் 1286 ஏரிகள் உள்ளது. இதில் 185 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது. 16 ஏரிகள் 90 சதவீதத்திற்கு மேலும், 95 ஏரிகள் 80 சதவீதத்திற்கு மேலும், 167 ஏரிகள் 70 சதவீதத்திற்கு மேலும், 312 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும், 352 ஏரிகள் 25 சதவீதத்திற்கு மேலும் தண்ணீர் உள்ளது. மீதமுள்ள 159 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாக தண்ணீர் உள்ளது.கண்ணமங்கலம் பகுதியில் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக கண்ணமங்கலம் வழியாக ஓடும் நாகநதியில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.
குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் செங்கம் செய்யாற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் செங்கம் செய்யாறு கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழை நீர் ஏரி நிரம்பி அனைத்து மழை மழை நீரும் உபரி நீராக வெளியேறுகிறது இந்த மழை நீரானது செல்லும் கால்வாய்கள் தூர்வார படாததால் தண்ணீர் அனைத்தும் விவசாய நிலத்திற்குள் சென்று முழுமையாக விளைநிலங்களை பாதித்து வருகின்றது