சாத்தனூர் அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு 118 அடி உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு 118 அடியாக உயர்ந்திருப்பதால் சாத்தனூர் அனை கடல் போன்று காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Continues below advertisement

கர்நாடக மாநிலத்தில் உருவகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே 1956ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.

Continues below advertisement


 

இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது காலை நிலவரப்படி சாத்தனூர் அனைக்கு வினாடிகு 2395 கன அடி வீதம் வந்து வந்து கொண்டிருக்கிறது. என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில நாட்களாக தண்ணீர் வரத்து இல்லாததால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் நேற்று முன்தினம் முதல் அணைக்கு நீர்வரத்து தொடங்கியது.சத்தனூர் அணையின் நீர்மட்டம் இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முழு கொள்ளளவான 119 அடி நிரம்பியது. அதன்பிறகு போதுமான மழையில்லாத காரணத்தால் அணை முழுமையாக நிரம்பவில்லை.

 


கடந்த 2020ம் ஆண்டும், கடந்த ஆண்டும் கனமழை பெய்தது. ஆனாலும், அணையின் மதகுகள் சீரமைப்பு பணி நடந்ததால், அதிகபட்சம் 99 அடி மட்டுமே நீர் நிரப்ப முடிந்தது.இந்த ஆண்டு அணையின் மதகுகள் சீரமைக்கப்பட்டதாலும், போதுமான பருவ மழை பெய்ததாலும் அணையின் முழு கொள்ளளவு நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 119 அடி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், பாசன கிணறுகள், ஏரிகள், அணைகள் என ஒட்டுமொத்த நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பி வருவதால், இந்த ஆண்டு விவசாய சாகுபடி முழுமையாக நடைபெறுவது உறுதியாகியிருக்கிறது. எனவே, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola